உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள்

அரசு பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள்

பொள்ளாச்சி;குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில், தர்மசாஸ்தா சேவா டிரஸ்ட் சார்பில், அரசுப்பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.பொள்ளாச்சி அருகே, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் மற்றும் தர்மசாஸ்தா சேவா டிரஸ்ட் சார்பில், எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, பேனா, பென்சில், பென்சில் பாக்ஸ் போன்ற கல்வி உபகரணங்கள், நோட்டுகள் மற்றும் வாய்ப்பாடு வழங்கப்பட்டன.அதில், வெள்ளாளபாளையம் ஊராட்சி துணை தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் கணேசன் வரவேற்றார். தர்மசாஸ்தா சேவா டிரஸ்டிட் பொறுப்பாளர்கள் ராமச்சந்திரன், ஆறுமுகம், குரு, ஜெயராமன் பங்கேற்றனர். ஆசிரியர் உஷா நன்றி கூறினார்.இதேபோன்று, 12 அரசு பள்ளிகளுக்கு நோட்டு, வாய்ப்பாடு, திருக்குறள் புத்தகம், ஆங்கில அகராதி, பேனா, பென்சில் வழங்கப்பட்டதாக நிர்வாகிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி