உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காப்பீடு தொகையை வாங்கித்தாங்க.. மாநகராட்சியில் மூதாட்டி முறையீடு

காப்பீடு தொகையை வாங்கித்தாங்க.. மாநகராட்சியில் மூதாட்டி முறையீடு

கோவை; பொதுமக்களிடம் குறைகேட்கும் கூட்டம், கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் மனுக்கள் பெற்றனர். அதில், சவுரிபாளையம் ஜி.ஆர்.ஜி., நகரை சேர்ந்த முதியவர் சீதாலட்சுமி (76) அளித்த மனுவில், 'கோவை மாநகராட்சியில், 2005 முதல் குடும்ப ஓய்வூதியம் பெறுகிறேன். மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு தொகை பிடிக்கப்படுகிறது. 2023, ஜூன் 11ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். இதற்காக, ஒரு லட்சத்து, 85 ஆயிரத்து, 890 ரூபாய் செலவு செய்தேன். இத்தொகையை காப்பீடு நிறுவனத்தில் இருந்து பெறுவதற்கு, 2023 ஜூலை, 4ல் ஆவணங்களை இணைத்து மாநகராட்சியில் மனு செய்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் காப்பீடு நிறுவனத்தில் இருந்து பணம் வரவில்லை. அத்தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளார்.துணை கமிஷனர் குமரேசன், உதவி நகர் நல அலுவலர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மொத்தம், 59 மனுக்கள் பெறப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கைக்கு, அதிகாரிகளுக்கு பரிந்துரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை