உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யானை - மனித மோதல் தடுக்கப்படும்: கலெக்டர் உறுதி

யானை - மனித மோதல் தடுக்கப்படும்: கலெக்டர் உறுதி

கோவை:தொண்டாமுத்தூரிலுள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறி குடியிருப்புகளுக்குள் நுழையும் யானைகள் முழுமையாக தடுக்கப்படும் என்று கலெக்டர் கிராந்தி குமார் எம்.எல்.ஏ., முன்னிலையில் விராலியூர் கிராம மக்களிடம் உறுதியளித்தார்.கோவை தொண்டாமுத்துார் தொகுதிக்குட்பட்ட நரசீபுரத்தை அடுத்த விராலியூரில் நேற்று முன் தினம் இரவு காட்டுயானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.இருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சூழலில் விராலியூர் மற்றும் தொண்டாமுத்துார் சுற்றுவட்டார கிராம மக்கள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வேலுமணி தலைமையில், நேற்று கலெக்டர் கிராந்திகுமாரை சந்தித்தனர்.அப்போது கலெக்டரிடம் வேலுமணி கூறியதாவது: வனத்துறையினர் ரோந்துப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும். அதிக ஒளி உமிழும் டார்ச் லைட்டுகள் மற்றும் அதிக ஒலி எழுப்பும் சயரன்கள் வழங்க வேண்டும்,யானைகளை விரட்ட போதுமான பட்டாசுகளை வழங்க வேண்டும். வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் தொய்வடைய கூடாது. குழுக்கள் குழுக்களாக பிரிந்து துரிதமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும்.யானைகள் குடியிருப்பினுள் நுழைந்ததும், உடனடியாக தகவலை வனத்துறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். யானைகளை விரட்டும் குழுவினர் போர்க்கால அடிப்படையில் பணி மேற்கொள்ள வேண்டும். இதனை மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.இதையடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருந்த கிராம மக்களை நேரடியாக சந்தித்து வாக்குறுதி அளிக்க கலெக்டர் கிராந்திகுமாரிடம் வேண்டுகோள் விடுத்தார்.அதனடிப்படையில் கலெக்டர் தனது அறையிலிருந்து வெளியே வந்து கிராமமக்களை சந்தித்து யானைகளை வனத்துக்குள் திருப்பி அனுப்பும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். இது குறித்து வனத்துறையோடு அவசர கூட்டம் கூட்டி முடிவுகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.அப்போது அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் தாமோதரன், அம்மன் அர்ஜூனன், செல்வராஜ், அருண்குமார், தொண்டாமுத்துார் ஒன்றிய தலைவர் மதுமதி உள்ளிட்ட கிராம மக்கள் திரளாக உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ