உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடியிருப்பு பகுதிக்கு யானைகள் விசிட்

குடியிருப்பு பகுதிக்கு யானைகள் விசிட்

வால்பாறை;வால்பாறை அருகே, குடியிருப்பு பகுதியில், யானைகள் முகாமிட்டதால் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.வால்பாறையில் பருவமழைக்கு பின், யானைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக, முடீஸ், தாய்முடி, அய்யர்பாடி, உருளிக்கல், பச்சமலை உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட்களில், நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.இந்நிலையில், நேற்று காலை வால்பாறை அடுத்துள்ள முடீஸ் எஸ்டேட் பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பு பகுதி அருகே, யானைகள் முகாமிட்டன. இதனால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்ல முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, யானையை வனப்பகுதிக்குள் விரட்டியதால், தொழிலாளர்கள் நிம்மதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை