உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அனைவருக்கும் சமமான கல்வி; பா.ஜ., கையெழுத்து இயக்கம்

அனைவருக்கும் சமமான கல்வி; பா.ஜ., கையெழுத்து இயக்கம்

கோவை; அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் அதை நோக்கி தமிழகம் செல்ல வேண்டும் அதற்கு தமிழகம் மும்மொழிக்கொள்கையை ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று காந்திபுரம் சிக்னல் அருகே பா.ஜ.,சார்பில் மக்களிடம் கையெழுத்துப்பெறும் நிகழ்வு நடந்தது.தேசிய கல்விக் கொள்கையால் தமிழ், ஆங்கிலம் தவிர கூடுதலாக நாம் விரும்பும் மொழியை எளிதாக மாணவர்கள் கற்கலாம். சர்வதேச தரத்திலான கல்வி எளிதாக கிடைக்கும், ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்கலாம்.ஏழை, பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வுகள் இன்றி அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கும். வசதி படைத்த குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதாக கிடைக்கும். இந்த விஷயங்களை முன்னிறுத்தி கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நடந்தது.திரளான மக்கள் பங்கேற்றனர்.மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் நந்தகுமார், முன்னாள் மண்டல் தலைவர் சவுந்தர்ராஜ், மாவட்ட துணை தலைவர் ஜெயதிலகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !