உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சமக்கல்வி எங்கள் உரிமை; பா.ஜ., கையெழுத்து இயக்கம்

சமக்கல்வி எங்கள் உரிமை; பா.ஜ., கையெழுத்து இயக்கம்

அன்னுார்; 'சமக்கல்வி எங்கள் உரிமை' என்னும் இயக்கத்தை தமிழக பா.ஜ., துவக்கியுள்ளது. இதில், மும்மொழி கொள்கை வேண்டும் என ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறப்பட உள்ளது.இந்நிகழ்ச்சி அன்னுார் ஒன்றியத்தில் நேற்று கைகாட்டியில் துவக்கி வைக்கப்பட்டது. பா.ஜ., வடக்கு ஒன்றிய தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து பேசுகையில், மும்மொழிக் கொள்கையில், தி.மு.க., அரசு இரட்டை வேடம் போடுகிறது. தமிழகத்தில் உள்ள பல லட்சம் ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. கோவை வடக்கு மாவட்டத்தில் மூன்று லட்சம் கையெழுத்து இரண்டு மாதங்களில் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என்றார். நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயபால், மாநில பொதுக்குழு உறுப்பினர் திருமூர்த்தி, நிகழ்ச்சி பொறுப்பாளர் ஈஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி