மேலும் செய்திகள்
வாகன விபத்தில் ஒருவர் காயம்
17-Aug-2024
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு வட்டாரத்தில், ஆண்டு தோறும், கொலை, கொள்ளை, சட்ட விரோத மது விற்பனை, வாகன விபத்து, தற்கொலை என, 400 முதல் 500 வழக்குகள் பதியப்படுகிறது. இங்கு பதியப்படும் வழக்குகள் விசாரணை, பொள்ளாச்சி மற்றும் கோவையில் உள்ள கோர்ட்களில் நடக்கிறது. இதனால், மக்கள் மற்றும் போலீசார் சிரமப்படுகின்றனர். பொள்ளாச்சி தாலுகாவில் இருந்து, கடந்த 2012ம் ஆண்டு கிணத்துக்கடவு தாலுகா பிரிக்கப்பட்டது. அப்போதே இங்கு கோர்ட் அமைக்க வேண்டும் என, பொது மக்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால், தற்போது வரை கோர்ட் அமைக்கும் கோரிக்கை நிறைவேறாமல் உள்ளது. கிணத்துக்கடவுக்கு பின், மதுக்கரை தாலுகா அறிவிக்கப்பட்டது. அங்கு, கோர்ட் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், கிணத்துக்கடவு தாலுகாவுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது.கிணத்துக்கடவு பகுதியில், விரைவில் புதிய கோர்ட் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
17-Aug-2024