உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பதிவு சரிபார்த்தல் முகாம் விவசாயிகள் பயன்பெறலாம்

பதிவு சரிபார்த்தல் முகாம் விவசாயிகள் பயன்பெறலாம்

பெ.நா.பாளையம், ; பெரியநாயக்கன்பாளையம் வட்டார விவசாயிகள், பதிவு சரி பார்த்தல் முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேளாண்துறை அறிவுரை கூறியுள்ளது.விவசாயிகள், அரசின் பல்வேறு திட்ட பலன்களை பெறுவதற்கு தங்களுடைய நில உடமை விபரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில், ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்க, அரசின் திட்ட பலன்களை, விவசாயிகள் குறித்த நேரத்தில் பெற ஏதுவாக அனைத்து விபரங்களையும் மின்னணு முறையில் சேகரிக்க, வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தற்போது, விவசாயிகளின் பதிவு விபரங்களுடன் ஆதார் எண், மொபைல் எண், நில உடமை விபரங்களையும் இணைக்கும் பணி நடந்து வருகிறது. விவசாயிகள் பொது சேவை மையம் சென்று, நில உடமை விபரங்கள் இணைக்கப்பட்ட பதிவுகளை மேற்கொள்ளலாம். இம்மாதம், 31ம் தேதிக்குள் பதிவு செய்து, அரசு திட்டங்களில் பயன்பெறலாம் என, வேளாண்துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ