உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாயிகள் உழவர் செயலியில் பட்ஜெட் கருத்து பதிவிடலாம்

விவசாயிகள் உழவர் செயலியில் பட்ஜெட் கருத்து பதிவிடலாம்

பெ.நா.பாளையம்; தமிழக வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கையில் சேர்க்க வேண்டிய அம்சங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய உழவர் செயலியில் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், gmail.comஎன்ற மின்னஞ்சல் வாயிலாகவும், உழவர்கள், பொதுமக்கள் தங்களது கருத்தினை பதிவிட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !