மேலும் செய்திகள்
நாளை விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்
29-Aug-2024
பொள்ளாச்சி;பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும், 3ம் தேதி நடக்கிறது.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், ஆக., மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும், 3ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமையில் நடக்கும் கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.எனவே, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று தங்களது விவசாயம் தொடர்புடைய குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை சப் - கலெக்டர் தெரிவித்தார்.
29-Aug-2024