உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாட்டர்பால்ஸ் எஸ்டேட் கோவில்களில் திருவிழா

வாட்டர்பால்ஸ் எஸ்டேட் கோவில்களில் திருவிழா

வால்பாறை; வால்பாறை அடுத்துள்ளது வாட்டர்பால்ஸ் எஸ்டேட் இரண்டாம் பிரிவு. இங்குள்ள விநாயகர், பத்ரகாளியம்மன், மாரியம்மன், முனீஸ்வரன், மதுரைவீரன், கருப்பசாமி, மாடசாமி கோவிலின், 62வது ஆண்டு திருவிழா கடந்த, 28ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.முன்னதாக காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமமும், 6:00 மணிக்கு அபிேஷக, அலங்கார பூஜையும் நடந்தது.தொடர்ந்து நடைபெறும் விழாவில் கடந்த, 7ம் தேதி இரவு, 8:30 மணிக்கு விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து பத்ரகாளியம்மன், மாரியம்மன் ஆகிய பூஜை கூடை ஆபரண பெட்டியுடன் கோவில்களில் ஆற்றங்கரைக்கு சென்று, இரவு, 12:00 மணிக்கு சக்திகரகம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்குச்சென்றனர்.விழாவில் நேற்று முன் தினம் காலை, 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரபூஜை நடைபெற்றது. பின் காலை, 11:00 மணிக்கு பக்தர்கள் அலகு பூட்டி கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.தொடர்ந்து மதியம், 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.இதே போல், வாட்டர்பால்ஸ் எஸ்டேட் முதல் பிரிவு (பழையகாடு) சக்திமாரியம்மன் கோவிலின், 73ம் ஆண்டு திருவிழா கடந்த, 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவில் நேற்று முன் தினம் காலை 10:00 மணிக்கு பக்தர்கள் அலகு பூட்டியும், பூவோடு எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து மதியம், 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !