உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை தீவிரம்; வனத்துறை தகவல்

தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை தீவிரம்; வனத்துறை தகவல்

கோவை: கோடை காலத்தில் காட்டுத் தீயைத் தவிர்க்க, போதுமான தீத்தடுப்பு முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநர் வெங்கடேஷ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:காட்டுத் தீ பரவாமல் இருக்க, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தீத்தடுப்புக் கோடுகளை நன்கு பராமரித்து வைத்துள்ளோம்.சமீபத்தில் கேரள வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அந்தக் காட்டுத் தீ தமிழகத்துக்குள் பரவாமல் தடுத்துள்ளோம். கேரள வனத்துறைக்கும் உதவியுள்ளோம்.இந்திய வன ஆய்வு (எப்.எஸ்.ஐ.,) மையம் செயற்கைக்கோள் உதவியோடு காட்டுத் தீ ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து உடனுக்குடன் குறுஞ்செய்தி வாயிலாக தகவல் தருகிறது.வனத்துறையினர் உடனடியாக செயல்பட்டு, தீயை அணைக்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளால், காட்டுத் தீயின் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தி வருகிறோம்.கோடையில் வன விலங்குகளின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய ஆங்காங்கு, நீர்த் தொட்டிகள் கட்டி, நீரை நிரப்பி வருகிறோம். ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, வனப்பகுதியில் நீர் நிரப்புவதற்காகவே, புதிய டிராக்டர்கள் வாங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ