உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையம்:தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு மாநில செயலாளர் பிரகலதா தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சிந்துஷா, பொருளாளர் தேவகி, துணை தலைவர் ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு திட்டத்தில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடத்தை போர்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைத்து சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும்.கிராம நிர்வாக உதவியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்வதை போல் ரூ.6,750 அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம், ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை போல் ஒருவருட பிரசவ கால விடுப்பு, சத்துணவில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். சத்துணவு பணியில் உள்ள பட்டதாரி பெண்களுக்கு தகுதி அடிப்படையில் பணி உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 100க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை