மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சி
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளி செண்பகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலவச கால்பந்து பயிற்சி அளிக்கப்படுகிறது.இந்த பயிற்சியானது, மும்பை 'பிரகதி பவுண்டேஷன்' அமைப்பு சார்பில் 'நம்ம பள்ளி நம்ம ஊர் பள்ளி' என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது.அதன்படி, 4ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு இலவச கால்பந்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.பயிற்சியாளர் கரண்மணிகண்டன் பயிற்சியை அளித்து வருகிறார். மாணவ, மாணவியரும் ஆர்வமுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.