உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அஞ்சலகத்தை இடமாற்ற வனத்துறை உத்தரவு! சின்கோனா தொழிலாளர்கள் அதிர்ச்சி

அஞ்சலகத்தை இடமாற்ற வனத்துறை உத்தரவு! சின்கோனா தொழிலாளர்கள் அதிர்ச்சி

வால்பாறை, ;வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா 'டான்டீ' தேயிலை தோட்டம். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த எஸ்டேட்களில், வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன.பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் மூக்கிய நீர்பிடிப்பு பகுதியான, சின்னக்கல்லாறு, கீழ்நீராறு ஆகிய இரு முக்கிய அணைகளும், இங்கு தான் உள்ளன.இந்நிலையில், சின்னக்கல்லார் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், இந்த தேயிலை எஸ்டேட்டை மூடுவதற்கு வனத்துறை ஏற்கனவே முடிவு செய்தது. முதல் கட்டமாக இங்குள்ள கிளை அஞ்சலகத்தை இடமாற்றம் செய்ய, மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரீதரன் தபால்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.அதில், 'ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு, சின்கோனா டான்டீ தேயிலை தோட்டம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி முற்றிலும் காப்பு வனமாக உள்ளதால், சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில் உள்ள கிளை அஞ்சலகத்தை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.வனத்துறையின் இந்த நடவடிக்கையால், சின்கோனா 'டான்டீ' தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.போஸ்ட் மாஸ்டர் கீதாஞ்சலியிடம் கேட்டபோது, ''சின்னக்கல்லார் கிளை அஞ்சலகம் மூடுவதற்கான உத்தரவு வனத்துறையிடமிருந்து, வால்பாறை அஞ்சலகத்திற்கு இது வரை வரவில்லை. முறைப்படி உத்தரவு வந்தால் கிளை அஞ்சலகம் இடமாற்றம் செய்வது குறித்து மேலதிகாரிகளிடம் பேசி முடிவு செய்யப்படும்,'' என்றார்.

தடை விதிப்பா?

வால்பாறை வரும் சுற்றுலா பயணியர், அதிகளவில் சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சிக்கும், கீழ்நீராறு அணைக்கும் செல்கின்றனர். இதற்கு வனத்துறை சார்பில், ஒரு நபருக்கு, 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.வனவிலங்குகளையும், இயற்கையையும் பாதுகாக்கும் விதமாக, சின்னக்கலார் தேயிலை தோட்டம் மூடப்பட்டால், சுற்றுலா பயணியர் இங்கு செல்ல தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ