உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சி காலம் பொற்காலம்: கவர்னர் ரவி பேச்சு

முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சி காலம் பொற்காலம்: கவர்னர் ரவி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விருதுநகர்: ''முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சி காலம் தமிழகத்தின் பொற்காலம்,'' என, விருதுநகரில் கவர்னர் ரவி பேசினார்.விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரியில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் அவர் பேசியதாவது: இந்தியாவில் சிறந்த மனிதர்களில் ஒருவர் முன்னாள் முதல்வர் காமராஜர். இளம் வயதில் தந்தையை பறிகொடுத்தும், 16 வயதில் விடுதலை போராட்டத்தில் பங்கேற்று அரசியலில் நுழைந்தவர்.அவர் ஆட்சி செய்த 1954 முதல் 1963 வரை, 9 ஆண்டுகள் தமிழகத்தின் பொற்காலம். அப்போது ஆரம்ப, உயர்நிலைக்கல்வி பயில மாணவர்கள் பல கி.மீ., செல்வதை குறைக்க தமிழகம் முழுதும் ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்தார். அதனால் தான் இன்று இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. 600 ஆண்டுகளுக்கு முன் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீமந்த் சங்கர் தேவ், தன் 30 வயதில் ராமேஸ்வரம், காஞ்சிபுரம் பகுதிகளுக்கு வந்து தங்கி கல்வி பயின்றுள்ளார்.இந்தியாவின் முதல் ஐ.ஐ.டி., சென்னையில் உருவாகவும், தமிழகத்தில் அதிக தொழில் நிறுவனங்கள் இருப்பதற்கும் காமராஜர் மட்டுமே காரணம். பிரதமராக நேரு இருந்த சமயத்தில் அப்போதே நெய்வேலி நிலக்கரி கார்ப்பரேஷன் அதிக லாபம் ஈட்ட முக்கிய காரணமாக இருந்தவர். தமிழகத்தில், 13க்கும் மேற்பட்ட மிகப்பெரிய அணைகளை கட்டி விவசாயம், நீர்வளம் பெருக வழிவகை செய்தவர். இன்று நாம் பேசும் சமூக நீதியை, அன்றே நிலை நிறுத்தியவர்.கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து 66 பேர் பலியாகியுள்ளனர். இதே செங்கல்பட்டு, விழுப்புரம் பகுதிகளில் கள்ளச்சாரயம் குடித்து 24க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தில் 14 மாதங்களுக்கு பின் தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். மக்களுக்கான நியாயம் உரிய காலத்தில் கிடைக்காமல் இருப்பது கண்டிக்கக்கூடியது. தமிழகத்தில் இன்றும் அதிக அளவிலான ஏழைகள் உள்ளனர். பிரதமர் மோடி அறிவித்த முன்னேற துடிக்கும் மாவட்டங்கள் பட்டியலில் விருதுநகர் மாவட்டமும் இடம் பெற்றுள்ளது. அதனால் இங்கு விரைவில் தொழில் வளம் பெருகி வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

பாமா
ஜூலை 14, 2024 22:46

அரசியல்வாதிகள், கெவுனர்களுக்கு எல்லாக்காலமும் பொற்காலம் தான்.


GMM
ஜூலை 14, 2024 14:18

அந்நியர்கள் கொலை, கலவரம், தீயிடல், கொள்ளையிட்டு சென்ற பின் சுதந்திரம். நாடு வறுமையில் இருந்த போது காமராஜர் முதல்வர். உள்ளூர் விவசாயம். நவீன தொழில் நுட்பம் இல்லை. ஏழைகள் உணவு கம்பு, சோளம், கேப்பை. இருந்தும் பள்ளியில் மதிய உணவு, சாலை, மருத்துவ, கல்வி வசதிகள். ஏராள நீர் தேக்கம், குடிநீர் கழிவு நீர், சுத்திகரிப்பு நிலையம்.. போன்ற ஏராள பொது நல திட்டங்கள். அரிசி, வயல் உள்ளவர்கள் உணவு. ஆனால் ஏமாற்று திராவிட இயக்கம் ஒரு படி அரிசி நிச்சயம். மூன்று படி லட்சியம் என்றது. பொற்காலம் பின் கற்காலம் துவக்கம். தமிழக காங்கிரஸ் அண்டி பிழைக்கிறது.


Sundar R
ஜூலை 14, 2024 12:14

1972-ல் படி அரிசியை 5 ரூபாய் என்று அநியாயமாக விலை உயர்த்தியதை செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் பார்த்தது இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது.


Mettai* Tamil
ஜூலை 14, 2024 12:09

கவர்னர் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்.. நன்றி.. காமராஜருக்கு பிறகு, பொற்காலத்தில் இருந்த மக்கள், கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டுக்கு பணம் வாங்கி ஊழல் வாக்காளர்களாக மாறி, ஊழல் அரசியல்வாதிகளை உருவாக்கிவிட்டனர். ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, நல்லசாராயம், கள்ளச்சாராயம் இவை அனைத்தும் ஆலமரமாய், ஆறாய் பெருகினாலும், தமிழ் நாட்டு மக்கள் ஓட்டுக்கு பணம், குவார்ட்டர், பிரியாணி வாங்கிகிட்டு compromise ஆகி அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்ற மனநிலைக்கு வந்துட்டாங்க.. அந்த பொற்காலத்த எந்த தலைமுறை மக்கள் பார்க்கப்போறாங்களோ தெரியல .....


Rajarajan
ஜூலை 14, 2024 11:21

அது எப்படி, அவர்கள் என்ன சொன்னாலும், அதை அப்படியே நம்புகின்றனர்? அது அவர்கள் விதி.


தமிழ்வேள்
ஜூலை 14, 2024 10:32

இந்த கருத்துக்கு இவரை காங்கிரஸ் எந்த வாதத்தை முன் வைத்து எதிர்க்கும்? ஆதரித்தால் திமுக எதிரி ஆகும்...எதிர்த்தால் சொந்த கட்சிக்காரனே கழுவி கழுவி ஊற்றுவான்... செல்லாத பெரும் தொகை நிலை என்னவோ?


ஆரூர் ரங்
ஜூலை 14, 2024 09:35

பச்சைத் தமிழர் காமராசருக்கே வாக்களிக்க ஈவேரா பிரச்சாரம் செய்த போது அதனை காமராஜர் நிராகரிக்கவில்லை. தி.க காங்கிரசுடன் கூட்டுப் பிரச்சாரமும் செய்தது. அதுவும் அவரது தோல்விக்குக் காரணம். எதிர்பார்த்தபடியே தேர்தலில் வென்றவுடன் அண்ணாதுரை கருணாநிதி ஈவேரா வை சந்தித்து இது உங்கள் ஆட்சி. நாங்கள் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று பேசினர். தீயவர் ஆதரவை ஏற்பது ஆபத்து.


Jysenn
ஜூலை 14, 2024 07:07

At last we have got a governor who always talks sense and sensibility with pride without prejudice.


முருகன்
ஜூலை 14, 2024 05:43

இவர் இதுவரை பேசியதில் இது தான் சிறந்தது


xyzabc
ஜூலை 14, 2024 05:14

சார், தற்போழுது கள்ள சாராய காலம்


முக்கிய வீடியோ