ரூ.6.99 லட்சம் மோசடி; பூ வியாபாரி மீது வழக்கு
போத்தனூர் : கோவைபுதூரை சேர்ந்தவர் ஜாபர்அலி, 45; பூ வியாபாரி. இவரிடம், கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்த பூ வியாபாரி சபரினாத், என்பவர் பூ வாங்கினார். அதற்கான தொகை, 6.99 லட்சம் ரூபாயை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து ஜாபர்அலி கோவை, ஜே.எம்.எண்: 7 கோர்ட்டில் மனு கொடுத்தார். விசாரித்த மாஜிஸ்திரேட் சபரினாத் மீது, நடவடிக்கை எடுக்க குனியமுத்தூர் போலீசாருக்கு அறிவுறுத்தினார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.