உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மான்செஸ்டர் சிதாராவில் இலவச நீர்மோர் சேவை

மான்செஸ்டர் சிதாராவில் இலவச நீர்மோர் சேவை

கோவை; மான்செஸ்டர் சிதாரா குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், இலவச நீர்மோர் வழங்கும் சேவை, நேற்று துவங்கப்பட்டது.சங்கம் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக இலவச நீர்மோர் பந்தல் சேவை வழங்கப்பட்டு வருகிறது. மூன்றாம் ஆண்டாக நேற்று சேவை துவங்கப்பட்டது.சங்கச் செயலாளர் பிரேமலதா கூறுகையில், ''எங்கள் அபார்ட்மென்ட்டில், 148 குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ளவர்களின் பங்களிப்புடன், இந்த நீர்மோர் சேவை மேற்கொள்ளப்படுகிறது. துவக்கத்தில் தினமும், 100 லிட்டர் மோர் வழங்குவோம். மே இறுதி வரை நீர்மோர் வழங்கப்படும். அதிகபட்சமாக, 200 லிட்டர் வரை நீர்மோர் வழங்கப்படும். வீட்டில் நாங்கள் தயாரிக்கும் மோர் என்பதால், சுவை அதிகம்; உடலுக்கு பாதுகாப்பானது,'' என்றார்.அபார்ட்மென்ட் மூத்த உறுப்பினர் பேராசிரியர் நாராயணசாமி, நீர்மோர் சேவையை துவக்கி வைத்தார். தலைவர் நளேந்திரன், பொருளாளர் வசந்தி ராமசாமி, இணை செயலாளர் செந்தில்குமார், சங்க உறுப்பினர்கள் யுவராஜன், ஸ்ரீலதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி