உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூலூரில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

சூலூரில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

சூலூர்;சூலூர் மற்றும் கருமத்தம்பட்டியில், இந்து முன்னணி மற்றும் பொது மக்கள் சார்பில், 100க்கும் மேற்பட்ட இடங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்தன.சூலூர் பெருமாள் கோவில் திடலில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு, சம்பத்குமார் தலைமை வகித்தார். காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் அருளாசி வழங்கினார்.மாநில செயலாளர் தாமு வெங்கடேஸ்வரன், இந்துக்களின் கடமைகள் குறித்து பேசினார். மாவட்ட செயலாளர் ராஜ்குமார், பா.ஜ., நிர்வாகிகள் பழனிசாமி, ரவிக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.இதேபோல், சோமனூர் கிருஷ்ணாபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், இ.மு., மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.கோட்ட செயலாளர் பாபா கிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி