உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பத்தாம் வகுப்பில் அதிக மார்க் பெறுவதில் சிக்கல் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள்  புலம்பல்

பத்தாம் வகுப்பில் அதிக மார்க் பெறுவதில் சிக்கல் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள்  புலம்பல்

பொள்ளாச்சி : 'பத்தாம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,' என, பள்ளித் தலைமையாசிரியர்கள் தெரிவித்துள்னளர்.தமிழக அரசு பள்ளிகளில், ஒன்று முதல் 9ம் வகுப்பு மாணவர்கள், ஆண்டு இறுதி தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்றாலும், அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்பதே, பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு.இதனால், பல பள்ளிகளில், முறையான பாட வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்படாமல், மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு முன்னேறி விடுகின்றனர். அந்த வரிசையில், 'நடப்பு கல்வியாண்டு, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள், குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றாலே பெரிய விஷயம்,' என, எதிர்பார்க்கப்படுகிறது.அரசு பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:1 முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் சிலர், தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் கல்வி பயில்கின்றனர். ஆனால், பெரும்பாலான மாணவர்கள், தமிழை முழுமையாக வாசிப்பதிலும், எழுதவும் தெரியாத நிலையில் உள்ளனர்.அதேபோல, கூட்டல், கழித்தல் என கணிதத்தின் அடிப்படை கற்றல் திறனையே இழந்துள்ளனர். இதற்கு, ஒவ்வொரு ஆண்டு இறுதி தேர்வின்போது, குறைந்த மதிப்பெண் பெற்றாலும் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும்.ஏப்., 2 முதல் 12ம் தேதி வரை, 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றாலும் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி என்ற பெயரில் முனனேறி விடுவர்.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை மையப்படுத்தியே பாடங்கள் நடத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் முழு மதிப்பெண் பெற சிரமப்படுவர். பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வில், அரசு பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ