இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
மிகச்சிறந்த ஆசிரியராக தனது இறுதி காலம் வரை வாழ்ந்து, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளையே, நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.அவரது பிறந்தநாளான செப்., 5ம் தேதியை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், மாணவர்கள் உட்பட அனைவரும், ஆசிரியர் தினமாக கொண்டாடுகின்றனர். இந்தியாவில், 1962ம் ஆண்டு முதல் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், ஆசிரியர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கி அரசு கவுரவிக்கிறது.அறியாமை இருள் போக்க, கல்வி என்ற ஒளிவிளக்கு ஏற்றி வழிகாட்டுகிற புனிதமான பணியே ஆசிரியர் பணி. நாளைய விஞ்ஞானி, பொறியாளர், கல்வியாளர், எழுத்தாளர், கலைஞர், தலைவரை உருவாக்குவது ஆசிரியர்களே.குழந்தைகளை அமரவைத்து பாடம் நடத்தும் ஆசிரியர்கள், அதே இடத்திலேயே இருக்கின்றனர். பயிலும் மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைகின்றனர். அதற்குக் காரணமான ஆசிரியர்களுக்கு நன்றி கூறும் நாளே ஆசிரியர்தினம்.எத்தனை விருதுகள் கிடைத்தாலும், மாணவர்கள் வளர்ந்து உன்னத பதவியை அடைவதில் கிடைக்கும் திருப்தி தான் உண்மையான விருது, என, தங்களது பணியில் கவனம் செலுத்தும் ஆசிரியர்களுக்கு ஒரு சல்யூட்!