உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரும் 29ல் இருதய தின விழிப்புணர்வு மராத்தான்

வரும் 29ல் இருதய தின விழிப்புணர்வு மராத்தான்

கோவை : குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை (ஜி.கே.என்.எம்.,) சார்பில், உலக இருதய தினமான, செப்., 29ம் தேதி, 'ரன் பார் லிட்டில் ஹார்ட்ஸ்' என்ற மராத்தான் நடைபெறவுள்ளது. இதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில், இம்மராத்தான் நிகழ்வுநடைபெறுகிறது. மராத்தான் போட்டி வரும் 29ம் தேதி காலை, 5:30 மணியளவில், பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும். மராத்தான் நிகழ்வுக்கான பதக்கம் மற்றும் டிசர்ட் வெளியீட்டு விழா, கடந்த 16ம் தேதி மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. இதில், மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசுவாமி கூறுகையில், ''ரன் பார் லிட்டில் ஹார்ட்ஸ்' முதல் பதிப்பில், 2,000 பேர் பங்கேற்றனர். இதில், கிடைத்த நிதியுதவியில் இதயம் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 29 குழந்தைகள் பயன்பெற்றனர். வரும் மராத்தான் போட்டியில், புற்றுநோய், இதய பாதிப்புகளில் இருந்து குணமடைந்த குழந்தைகளும் பங்கேற்கவுள்ளதாகவும், வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்,'' என்றார்.இப்போட்டியில் பங்கேற்க, ticketprix.com என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம். அல்லது, 97900 72303 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை