உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வால்பாறையில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை

வால்பாறையில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை

வால்பாறை : வால்பாறையில், தொடர் கனமழை பெய்யும் நிலையில், இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வால்பாறையில், கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்கிறது. இதனால், பல இடங்களில் மண் சரிந்தும், மரம் விழுந்தும் போக்குவரத்து பாதிக்கிறது. பல மணி நேர மின்வெட்டும் ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இன்றும் மழை தொடரும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தொடர் கனமழை காரணமாக, வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை