உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீசார் மீது தனிநபர் வழக்கு; அரசின் அனுமதி தேவையில்லை உயர் நீதிமன்றம் உத்தரவு

போலீசார் மீது தனிநபர் வழக்கு; அரசின் அனுமதி தேவையில்லை உயர் நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'போலீஸ்காரர் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலான பணி நிலையில் உள்ளவர்கள் மீது தனி நபர் வழக்குத் தொடர நியமன அதிகாரி மூலம் அரசிடம் முன் அனுமதி பெறத் தேவையில்லை' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. போலீஸ்காரர் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை பணியிலுள்ளவர்களுக்கு எதிராக கீழமை நீதிமன்றங்களில் தொடரப்பட்ட தனிநபர் வழக்குகளை ரத்து செய்யக் கோரி, சிலர், உயர் நீதிமன்றக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.தனி நீதிபதி, 'இதில் ஏற்கனவே மாறுபட்ட உத்தரவுகள் உள்ளன. இரு நீதிபதிகள் அமர்வு முடிவெடுக்க பரிந்துரைக்கப்படுகிறது' என உத்தரவிட்டார்.அந்த மனுவை நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, கே.ராஜசேகர் அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: அரசின் பொதுவான பணியில் உள்ளவர்களை நியமனம் செய்யும் அதிகாரியால் அவர்களை பணி நீக்கம் செய்ய முடியும். இதன்படி, போலீஸ்காரர் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலானவர்களை ஐ.ஜி.,நிலையிலான அதிகாரிகள் நியமிக்கின்றனர்.டி.எஸ்.பி., உள்ளிட்ட உயரதிகாரிகள் அரசால் நியமிக்கப்படுகின்றனர். நியமன அதிகாரியே பணி நீக்கம் செய்ய முடியும் என்பதால் இன்ஸ்பெக்டர் வரையிலானவர்கள் மீது தனிநபர் வழக்குத் தொடர துறை உயரதிகாரியின் முன் அனுமதி தேவையில்லை.மனுதாரர்கள் தரப்பு: குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 197ன்படி தனி நபர் வழக்கு தாக்கல் செய்ய அரசிடம் அனுமதி பெற வேண்டும். இதில் உயரதிகாரி மற்றும் கீழ்நிலை ஊழியர் என்பதில் பாகுபாடு பார்க்க முடியாது. இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதிகள்: அரசால் இல்லாமல் உயரதிகாரி ஒருவரால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும் என்ற நிலையில் உள்ள போலீஸ்காரர் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலானவர்களுக்கு குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு - 197 பொருந்தாது. இதை ஏற்கனவே நீதிமன்றத்தின் பல உத்தரவுகள் உறுதி செய்துள்ளன. அரசால் நடவடிக்கை எடுக்கக்கூடிய பணி நிலையில் உள்ளவர்களுக்குத்தான் அனுமதிபெற வேண்டும் என்பது பொருந்தும். போலீஸ்காரர் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலான பணி நிலையில் உள்ளவர்கள் மீது தனி நபர் வழக்குத் தொடர நியமன அதிகாரி மூலம் அரசிடம் முன் அனுமதி பெறத்தேவையில்லை. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Gokilapandian
ஜூலை 25, 2024 15:20

Please want case number


skv srinivasankrishnaveni
ஜூலை 25, 2024 11:31

சிலரின் திமிறினால் நேர்மையானவர்களுக்கும் கெட்டப்பேரு வரது அதேபோல பலரும் காவல்துறை நாளே ஏளனமா பார்க்கும் நிலை இருக்கு. அரசாங்கத்துலே வேலையும் எல்லோருமே லஞ்சம் வாங்கறாங்க இல்லீங்க ஆனால் அப்படிப்பட்ட நேர்மையாளர்களை தண்ணீ இல்லாத உங்களுக்கே மாற்றி கஷ்டம் தாரங்க என்பதும் உண்மையே


Selvaraj K
ஜூலை 25, 2024 07:06

உண்மை தான் ஐ பி சி 211 ல் பொய் வழக்கு பொய் ஆவணம் புணையும் அதிகாரிகளுக்கு துணை போகும் வக்கீல்கள் ஆக்ட் 35 1இவிடேன்ஸ் 125 +1 மற்றும் நீதி துறை அதிகாரிகள் மீது ஐ பி சி 166 மற்றும் சி ஆர் பி சி 197 ல் வழக்கு போடலாம் ஆனால் இத விசாரிக்குறது இவர்களே எப்படி பாதிக்கப்பட்டவனுக்கு நீதி கிடைக்கும் ?


Appavoo Sakthivel
ஜூலை 26, 2024 10:27

ஐலண்ட்


GMM
ஜூலை 25, 2024 06:49

போலீஸார் மீது தனி நபர் வழக்குக்கு நீதிமன்றம் அனுமதி. வழக்கிற்கு பின் இட மாறுதல் இருக்கும். பொறுப்பு புதிய போலீஸார் ஏற்பார். வழக்கு பழைய போலீஸார் மீது இருக்கும். நீதிமன்றம் எங்கு, எப்படி விசாரித்து தீர்ப்பு சொல்லும். உத்தரவு நிர்வாக ஊழியர்களுக்கு பொருந்துமா? கவுன்சிலர், மக்கள் பிரதிநிதிகள் மீது தனிநபர் வழக்கு தாக்கல் செய்ய முடியுமா? எதற்கு எடுத்தாலும் வழக்கு தான் தீர்வா?


Kasimani Baskaran
ஜூலை 25, 2024 05:46

அரசின் அனுமதி பெற்றுத்தான் வழக்கு என்பது நீதித்துறை அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவது போல இருக்கிறது.


புதிய வீடியோ