உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறந்த பேராசிரியர்களுக்கு கல்லுாரியில் கவுரவம்

சிறந்த பேராசிரியர்களுக்கு கல்லுாரியில் கவுரவம்

கோவை : நவ இந்தியா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், ஆசிரியர் தின விழா மற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.மத்திய கலால் வரி மற்றும் சரக்கு, சேவை வரித்துறை ஆணையர் ராமகிருஷ்ணன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பேராசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டில், முதல் மூன்று இடங்கள் முறையே, எம்.பி.ஏ., இயக்குனர் பாமினி மற்றும் எம்.பி.ஏ., உதவிப் பேராசிரியர் திவ்யா, கணினி அறிவியல் மற்றும் தரவு பகுப்பாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் பிரணீஷ், பி.காம். தகவல் தொழில்நுட்பத் துறைத்தலைவர் சசிகலாதேவி ஆகியோர் பிடித்தனர். இவர்களுக்கு, கேடயம், ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.சிறந்த துறைகளுக்கான முதல் மூன்று இடங்கள் முறையே, மேலாண்மைத்துறை மற்றும் கணினி அறிவியல் துறை, வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டுத்துறை, பன்னாட்டு வணிகத்துறை ஆகியவை பிடித்தன. எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதல்வர் சிவக்குமார் மற்றும் சுமார் 300க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி