உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாதித்த தென்னை மரத்தை அகற்ற மானியம்  தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தகவல்

பாதித்த தென்னை மரத்தை அகற்ற மானியம்  தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தகவல்

பொள்ளாச்சி : 'தென்னை மரங்கள் புதுப்பித்தல் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம்,' என, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்தார்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், 17,000 ெஹக்டேர் பரப்பில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. தென்னையில் நோய் தாக்குதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.தென்னை வேர் வாடல் நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்து தோட்டக்கலைத்துறை சார்பில், விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்நிலையில், தென்னை மரங்கள் புதுப்பித்தல் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி வடக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சவுமியா அறிக்கை:தென்னை வேர்வாடல் நோய் பிற மரங்களுக்கு பரவுதலை தடுக்க, குறைவாக அல்லது காய்கள் இல்லாத நோயுற்ற மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.நன்றாக வடிகால் வசதி செய்வதுடன், உர மேலாண்மையினை தவறாமல் பின்பற்றி வேர்வாடல் நோயினை கட்டுப்படுத்தலாம்.பொள்ளாச்சி வடக்கு தோட்டக்கலைத்துறை வாயிலாக, தென்னை வளர்சசி வாரியத்தின் திட்டங்களான தென்னை மரங்களை புதுப்பித்தல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதன் வாயிலாக விவசாயிகளுக்கு பாதிப்படைந்த மரங்களை அகற்ற மானியம், புதிய தென்னங்கன்றுகளும், மரங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உயிர் உரங்களும் வழங்கப்பட உள்ளது.பயனடைய விரும்பும் விவசாயிகள், சிட்டா அடங்கல், உரிமைச்சான்று, நில வரைபடம், ஆதார் கார்டு நகல், வங்கி சேமிப்பு புத்தக நகல், இரண்டு புகைப்படங்களுடன் அலுவலகத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ