உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் எப்படியிருக்கு! கூகுள் ஷீட் வாயிலாக பதிவு

பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் எப்படியிருக்கு! கூகுள் ஷீட் வாயிலாக பதிவு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அதன் தேவைகள் குறித்த விபரம், 'கூகுள் ஷீட்' மற்றும் 'எமிஸ்' தளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள, பல அரசு பள்ளிகளில், பி.எஸ்.என்.எல்., இணையதள இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. மேலும், உயர்தொழில்நுட்ப ஆய்வகம், ஸ்மார்ட் கிளாஸ் துவக்கப்பட்டும், மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.இருப்பினும், பல பள்ளிகளில், குடிநீர் வசதி, கழிவறை, அறிவியல் ஆய்வகங்கள், நுாலகங்கள், தேவையான வகுப்பறை கட்டடங்கள், மின் இணைப்புகள், விளையாட்டு மைதானங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கிடையாது.இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனரக உத்தரவின் கீழ், அடிப்படை உள்கட்டமைப்பு வசதி குறைபாடுகள், தேவைப்படும் வகுப்பறை கட்டடங்கள் உள்ளிட்ட பல விபரங்கள், 'எமிஸ்' தளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், 'கூகுள் ஷீட்' வாயிலாகவும் முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:பள்ளிகளில், ஒவ்வொரு முறையும், அடிப்படை வசதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினால், அதற்கான விபரம் சரிவர இருப்பதில்லை. எனவே, ஒவ்வொரு பள்ளியிலும் தேவையான அடிப்படை வசதிகளை, 'எமிஸ்' தளத்தில் பதிவு செய்ய தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், 'கூகுள் ஷீட்' வாயிலாகவும் தேவையான உள்கட்டமைப்பு விபரம் கோரப்படுகிறது. அதில், பெயின்டிங், எலக்ட்ரிக்கல், சிவில் உள்ளிட்ட பணிகள் குறித்த விபரங்களை எவ்வாறு உள்ளீடு செய்து பதிவு செய்வது குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதன்வாயிலாக, அரசிடம் நிதி பெறப்பட்டு, பொதுப்பணித்துறை அல்லது உள்ளாட்சி அமைப்பு வாயிலாக மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப் படும். அதுவும், ஒவ்வொரு பள்ளியின் நிலைக்கு ஏற்றவாறே பணி உத்தரவு பெறப்படும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை