உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி புறக்கணிப்பு? தமிழக அரசு மீது மருத்துவர்கள் குற்றச்சாட்டு

ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி புறக்கணிப்பு? தமிழக அரசு மீது மருத்துவர்கள் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தமிழகத்தில், ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி துறைகள் புறக்கணிக்கப்படுவதாக, அத்துறை டாக்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இந்திய மருத்துவ முறை சிகிச்சைகளை விரிவுப்படுத்தும் வகையில், ஆயுஷ் அமைச்சகம், சென்னை, தேனி, திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில், தலா 50 படுக்கை வசதியுடன் கூடிய ஆயுஷ் மருத்துவமனை அமைக்க, 2018 - 19ல் ஒப்புதல் அளித்துள்ளது.மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் அமைக்கப்பட்ட இம்மருத்துவமனைகளில், ஒருங்கிணைந்த இந்திய முறை மருத்துவ பிரிவுகள் இயங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.ஆனால், சித்தா மற்றும் யோகா, இயற்கை மருத்துவ பிரிவுகள் மட்டுமே செயல்படுகின்றன. மற்ற துறைகள் புறக்கணிக்கப்படுவதாக, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி டாக்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன், சமீபத்தில் ஆயுஷ் மருத்துவ குழுவினர் சோதனையில், ஆயுர்வேதா போன்ற துறைகள் இருப்பதாகவும் கணக்கு காட்டப்பட்டதாக புகார் எழுந்தது.

ஆயுர்வேதா டாக்டர்கள் கூறியதாவது:

இந்திய மருத்துவ முறைகளை விரிவுப்படுத்தும் வகையில், பல்வேறு மாநிலங்களில் ஆயுஷ் மருத்துவமனைகளுக்கு, மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது. குறிப்பாக, மத்திய அரசு 75 சதவீதம்; மாநில அரசு 25 சதவீத நிதி பங்களிப்புடன், இம்மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.மற்ற மாநிலங்களில், ஒருங்கிணைந்த ஆயுஷ் சிகிச்சை பிரிவுகள் செயல்படுகின்றன. தமிழகத்தில், சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மட்டுமே செயல்படுகின்றன. ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி பிரிவுகளை மாநில அரசு புறக்கணித்து வருகிறது.ஆயுர்வேதாவில் உள்ள, 'பஞ்சகர்மா' சிகிச்சைக்கு, தமிழகத்தில் இருந்து பலர் கேரளா செல்கின்றனர். இச்சிகிச்சை, வசதி படைத்தவர்கள் மட்டுமே மேற்கொள்ளும் ஒன்றாக உள்ளது. தமிழகத்திலேயே ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவ சிகிச்சை முறைகள் வழங்குவதன் வாயிலாக, அரசு மருத்துவமனையில் இலவசமாக பஞ்சகர்மா சிகிச்சை முறையை, ஏழை மக்களும் பெற முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தேனி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், சித்தா மற்றும் யோகா இயற்கை மருத்துவ பிரிவுகள் தலா, 25 படுக்கை வசதியுடன் செயல்பட்டு வருகின்றன. அதேநேரம், அரசு மருத்துவமனைகளில், ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி துறைகளும் செயல்படுகின்றன' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Aanand Kanthasamy P
ஜூன் 27, 2024 09:26

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்து சென்றும் இன்னும் தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் மாவட்ட தலை நகரங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் உள்ளன. காற்று மாசு,குடிநீர் மாசு என நச்சை சுற்று சூழல் பாதிப்பு ஏற்படும் இன்னல்கள் அரசு தருகிறது. மது விற்பனை டார்கெட் வைத்து விற்பனை. இவ்வளவு இன்னல்கள் அரசு தருகிறது, ஆனால் அடிப்படை வசதிகள் ஆயுஷ் மருத்துவம் அனைத்து மாவட்டம், நகராட்சி, பேரூராட்சி,ஊராட்சிகளில் இருக்கவேண்டும். 50 படுக்கை அறை வசதிகள் ஆன்லைன் கணினி இணைதள மருத்துவ வசதி, தேவையான அனைத்து மருந்து உற்பத்தி மூல பொருட்கள் அனைத்துமுற்பதி அனைத்து மாவட்டங்களில் செய்ய வேண்டும். தரமான மூலிகை இயற்கை வழியில் உற்பத்தி செய்ய வேண்டும்.


GoK
ஜூன் 26, 2024 09:30

திராவிட திருட்டு மாடல் இதையும் செய்யும் இன்னுமும் செய்யும் கள்ள சாராய கழகம்


sethu
ஜூன் 26, 2024 08:58

கோயில்களை இடித்து கோயில் குளங்களை வீட்டுமனைகளாக விற்கும் இந்த கிறிஸ்தவ அரசும் அதன் முதல்வரும் சபாநாயகனும் இன்னுமா உங்களுக்கு நல்லது செய்வான்னு நம்பி 40 போண்டா கும்மாளுக்கு கள்ள ஒட்டு போடவிட்டிங்க தாக்கு தானே துரோகி தமிழன் தான் திமுக காரன் அல்ல .


Kasimani Baskaran
ஜூன் 26, 2024 04:55

எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாத பாரம்பரிய மருத்துவ முறைகளை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துவது கிடையாது. இவற்றையெல்லாம் பிரபலப்படுத்த வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை