மேலும் செய்திகள்
கால்பந்து ; சாதித்த பள்ளிகள்
23-Aug-2024
கோவை: முதல்வர் கோப்பைக்கான வாலிபால் போட்டியில் இருகூர் அரசு மேல்நிலைப் பள்ளி அணி முதலிடம் பிடித்தது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் கடந்த, 10ம் தேதி துவங்கியது. மறுநாள் முதல் தடகளம், கால் பந்து, கபடி உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நேரு ஸ்டேடியம், பாரதியார் பல்கலை என பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.இதில், பள்ளி மாணவர்கள் மட்டும், 18 ஆயிரத்து, 679 பேர் பங்கேற்றனர். கற்பகம் பல்கலையில் வாலிபால் போட்டிகள் நடந்த நிலையில், மாணவர்கள் பிரிவில், 80 அணிகள், மாணவியர் பிரிவில், 18 அணிகள் என, 98 அணிகளை சேர்ந்த, 1,372 பேர் பங்கேற்றனர்.இதில், மாணவியருக்கான இறுதிப்போட்டியில், இருகூர் அரசு மேல்நிலைப் பள்ளி அணி, பீளமேடு ஏ.பி.சி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியை, 2-0 என்ற செட் கணக்கில் வென்று முதலிடம் பிடித்தது.பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மேல்நிலைப் பள்ளி அணி, 2-1 என்ற செட் கணக்கில் ராம்நகர் சபர்பன் மேல்நிலைப் பள்ளி அணியை வென்று மூன்றாம் இடம் பிடித்தது. மாணவர்களுக்கான அரை யிறுதி போட்டியில், பொள்ளாச்சி என்.ஜி.என்.ஜி., பள்ளி அணி, 2-1 என்ற செட் கணக்கில் அகர்வால் மெட்ரிக் பள்ளி அணியையும், ராம்நகர் சபர்பன் பள்ளி அணி, 2-0 என்ற செட் கணக்கில் ஏ.பி.சி., மெட்ரிக் பள்ளி அணியையும் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப்போட்டியில், சபர்பன் மேல்நிலைப் பள்ளி அணி, 2-0 என்ற செட் கணக்கில் என்.ஜி.என்.ஜி., மெட்ரிக் பள்ளி அணியை வென்று முதலிடம் பிடித்தது. அகர்வால் மெட்ரிக் பள்ளி அணி மூன்றாம் இடத்தையும், ஏ.பி.சி., மெட்ரிக் பள்ளி அணி நான்காம் இடமும் பிடித்தது.
23-Aug-2024