உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழைத்தார் வரத்து அதிகரிப்பு ;விலை உயர்வதற்கு வாய்ப்பு

வாழைத்தார் வரத்து அதிகரிப்பு ;விலை உயர்வதற்கு வாய்ப்பு

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டிற்கு, வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில், கடந்த வாரத்தை விட வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.மார்க்கெட்டில், தற்போது செவ்வாழை கிலோ - 60, நேந்திரன் - 50, கதளி - 45, ரஸ்தாளி, பூவன், சாம்பிராணி -- 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது.கடந்த வாரத்தை விட, பூவன் வகை வாழைத்தார் கிலோவுக்கு 3 ரூபாய் விலை குறைந்துள்ளது. கதளி மற்றும் ரஸ்தாளி வகை வாழைத்தார் கிலோவுக்கு 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த வாரத்தை விட வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது உள்ளூர் மற்றும் வெளியூர் வரத்து உள்ளது. விலையில் கிலோவுக்கு ஐந்து ரூபாய் வரையிலும் மாற்றம் இருந்தது. வரும் நாட்களில் விலை உயரும் வாய்ப்புள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி