மேலும் செய்திகள்
மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது
24-Feb-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தினசரி காய்கள் மார்க்கெட்டில், வரத்து அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், நேற்று தக்காளி (15 கிலோ பெட்டி) - 160, தேங்காய் (ஒன்று) - 35, கத்தரிக்காய் -- 12, முருங்கைக்காய் -- 70, வெண்டைக்காய் -- 35, முள்ளங்கி -- 15, வெள்ளரிக்காய் -- 25, பூசணிக்காய் -- 10, அரசாணிக்காய் -- 8, பாகற்காய்- - 35, புடலை -- 15, சுரைக்காய் -- 10, பீர்க்கங்காய் -- 35, பீட்ரூட் -- 12, அவரைக்காய் -- 20, பச்சை மிளகாய் -- 25 ரூபாய்க்கு விற்பனையானது.சென்ற வாரத்தை விட தற்போது தக்காளி (15 கிலோ பெட்டி) -- 10, பாகற்காய் - 10, வெள்ளரிக்காய் - 5, சுரைக்காய் - 3 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.மேலும், முருங்கைக்காய் (கிலோ) - 10, அவரைக்காய் மற்றும் பச்சை மிளகாய் 5 ரூபாய் விலை குறைந்துள்ளது.வியாபாரிகள் கூறியதாவது, தினசரி மார்க்கெட்டில் நேற்று அனைத்து காய்கள் வரத்தும் சற்று அதிகமாக இருந்தது. மேலும் ஒரு சில காய்கள் விலை மட்டும் ஏற்றமடைந்திருந்தது.வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் வரும் நாட்களில் காய்கள் வரத்து குறைவாகவும், விலை அதிகமாக இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.இவ்வாறு, தெரிவித்தனர்.
24-Feb-2025