பாதுகாப்பில்லாத பெண் குழந்தைகளும் பெண்களும் உங்களைத்தான் தேடுறாங்க!
வார இறுதி நாட்களில் கோவை வ.உ.சி., பூங்காவில் பல்வேறு நிகழ்வுகள் இருந்தாலும்,நேற்று சற்று வித்தியாசம் இருந்தது. பூங்காவின் ஒருபகுதி பெண்களால் கலர்புல்லாக நிரம்பியிருந்தது.'என்னடா இது புதுசா இருக்கே...' என, அருகில் சென்றோம். ஏரியாவேகலகலப்பாக இருந்தது. பெண்கள் ஆட்டம், பாட்டம் என, உற்சாகத்தில் இருந்தனர்.'யாருப்பா இவங்க, என்ன பண்றாங்க' என அறியும் ஆவலில் அவர்களுடன் பேசினோம். அவர்கள் அனைவரும் 'பெண்' அமைப்பை சேர்ந்தவர்கள் எனத் தெரிந்தது.அமைப்பின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மைதிலி கூறியதாவது:ஐந்து ஆண்டுகளாக அமைப்பை நடத்துகிறோம். அமைப்பில், அனைத்து தரப்புபெண்களும் உள்ளனர். பெண்களின் பிரச்னை நியாயமாக இருந்தால் அவர்களுக்கு உதவுகிறோம். இதுதவிர, அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவுகிறோம். தற்போது ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம்.அத்துடன், 100 பேச்சாளர்களை தயார் செய்து வருகிறோம். எல்லாமே, சரிபாதி, சரிசமம் என, சட்டம் உள்ளது. அதை முழுமையாக அமல்படுத்த வைப்பதே எங்கள் இலக்கு.பொது வெளியில், பெண்களுக்கு நடக்கும் அநீதிக்கு, அவர்களின் பயம் மட்டுமே காரணம். அதை தவிர்க்க, அவர்கள் தைரியமாக வெளியில் வந்து பேச வேண்டும். அதை போக்கவே எங்கள் அமைப்பு செயல்படுகிறது.இவ்வாறு, அவர்கூறினார்.பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பாற்ற தற்போதைய சூழலில், உங்கள் சேவை நிறைய தேவை. வெல்கம் லேடீஸ்!