உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொண்டை ஊசி வளைவில் மேம்பாட்டுப்பணிகள் ஆய்வு

கொண்டை ஊசி வளைவில் மேம்பாட்டுப்பணிகள் ஆய்வு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, ஆழியாறு பகுதியில் இருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில், 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது.பாதுகாப்புடன் கூடிய வாகன போக்குவரத்து கருதி, தேவைக்கு ஏற்ப, விரிவாக்கம் மற்றும் தடுப்புகள் அமைத்து, சாலை மேம்படுத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், 40வது கொண்டை ஊசி வளைவு பகுதியில், அய்யர்பாடி எஸ்டேட் பகுதிக்கு செல்லும் சாலை சந்திப்பு உள்ளதால், அங்கு, ஒருங்கிணைந்த சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.இதற்காக, 2.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில், நெடுஞ்சாலை, சாலை பாதுகாப்பு அலகு கண்காணிப்புப் பொறியாளர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.மேலும், வாகன ஓட்டுநர்கள், எளிதாக சாலையைக் கடந்து செல்லும் வகையில், சந்திப்பு மேம்பாட்டு பணியினை மேற்கொள்ளவும் சக அதிகாரிகளை அறிவுறுத்தினார்.விரிவாக்கம் செய்யப்பட்ட மாதா கோவில் சந்திப்பு, பழைய வால்பாறை சந்திப்பு பகுதிகளை ஆய்வு செய்து, விரைவில் பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.கோவை சாலை பாதுகாப்பு அலகு கோட்டப் பொறியாளர்கள், பொள்ளாச்சி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் சரவணசெல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ