மேலும் செய்திகள்
ரத்தினம் கல்லுாரி சார்பில் 'காம்பிஸ் எக்ஸ்போ'
10-Aug-2024
கோவை;கல்லுாரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் ஒட்டுமொத்த 'சாம்பியன்ஷிப்' பட்டத்தை, பி.எஸ்.ஜி., கல்லுாரியின் மாணவ, மாணவியர் அணி வென்றுள்ளது.பாரதியார் பல்கலைக்குட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உட்பட பல்வேறு இடங்களில் நடந்தன. இதில், தடகளம், பால் பேட்மின்டன், செஸ், கபடி, ஹாக்கி, டென்னிஸ் என, 38 வகையான போட்டிகள் இடம்பெற்றன. இதில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை, 171 புள்ளிகளுடன் பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியின், மாணவர் அணி வென்றது. பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி அணி, 67 புள்ளிகளுடன் இரண்டாம் இடம், கோவை என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி, 49 புள்ளிகளுடன் மூன்றாம் இடம், ரத்தினம் கலை அறிவியல் அணி, 46 புள்ளிகளுடன் நான்காம் இடமும் பிடித்தன.மாணவியர் பிரிவில், 93 புள்ளிகளுடன் பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணி, ஒட்டுமொத்த 'சாம்பியன்ஷிப்' பட்டத்தை பெற்றது. இரண்டாம் இடத்தை, 77 புள்ளிகளுடன் கோவை நிர்மலா மகளிர் கல்லுாரி அணியும், மூன்றாமிடத்தை 35 புள்ளிகளுடன் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரி அணியும், நான்காமிடத்தை 30 புள்ளிகளுடன், கோவை பி.கே.ஆர்., பெண்கள் கல்லுாரி அணியும் பிடித்தது.
10-Aug-2024