மேலும் செய்திகள்
'நவீன' தெரு பெயர் பலகை போஸ்டரால் அலங்கோலம்
07-Aug-2024
பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரில், கடைகளின் பெயர் பலகைகள் உரிய முறையில் உள்ளதா என, துறை ரீதியான அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டுமென, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழக கடைகள் மற்றும் வணிக நிறுவன சட்டப்படி, வணிக நிறுவனங்களில், நிறுவனத்தின் பெயர் தமிழில் இருக்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால், 5:3:2 என்ற அளவில், முறையே, தமிழ், ஆங்கிலம், பிறமொழியில் பெயர்கள் இடம் பெறலாம்.அவை, ஒரே பலகையில், சீர்திருத்த எழுத்து வடிவில் இடம் பெற வேண்டும் என, தமிழக வணிக நிறுவன சட்டம் வரையறுத்துள்ளது. ஆனால், பொள்ளாச்சி நகரில், பெரும்பாலான கடைகளில், இவ்விதிகள் சரிவர பின்பற்றப்படாமல் உள்ளது.தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற, வணிக நிறுவன சட்டத்தை நிறைவேற்றுவதில், சில கடை உரிமையாளர்கள் மெத்தனமாக உள்ளனர்.இதுதவிர, துறை ரீதியான அதிகாரிகள், பிற மொழி பெயர் பலகை வைத்துள்ள வணிக நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்வதோ அல்லது குறைந்தபட்சம் அறிவுறுத்தி, புதிய பெயர் பலகை வைக்கவே நடவடிக்கை எடுப்பதும் கிடையாது.கடைகளின் பெயர் பலகை அளவுகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்டு காணப்படுகிறது. ஒரு சில பகுதிகளில், வாடிக்கையாளர்களை அச்சுறுத்தும் வகையில், பெரிய அளவிலான பெயர் பலகைகள் காணப்படுகின்றன.தன்னார்வலர்கள் கூறியதாவது: தமிழக அரசு, கோர்ட் உத்தரவுப்படி, வணிக நிறுவனங்களில் பெயர்ப்பலகை அமைக்க வேண்டும். பெயர்ப்பலகைகள் உரிய முறையில் உள்ளதா என, தமிழ் வளர்ச்சி மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.விதிமுறைப்படி பெயர்ப்பலகை அமைத்திடாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். அதேபோல், பிளக்ஸ் பேனரில் உள்ள அச்சுறுத்தும் வகையிலான பெயர் பலகைகளையும் அகற்ற வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
07-Aug-2024