உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லுாரிகளுக்கு இடையே டென்னிஸ்; இரு பிரிவிலும் பி.எஸ்.ஜி., அபாரம்

கல்லுாரிகளுக்கு இடையே டென்னிஸ்; இரு பிரிவிலும் பி.எஸ்.ஜி., அபாரம்

கோவை : பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான டென்னிஸ் போட்டிகள் எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது. இதில், ஆடவர் பிரிவில், 10 அணிகளும், மகளிர் பிரிவில் எட்டு அணிகளும் என, 18 அணிகள் பங்கேற்றன. ஆடவர் பிரிவில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி முதலிடத்தையும், குமரகுரு கல்லுாரி இரண்டாம் இடத்தையும், ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மூன்றாம் இடத்தையும், ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா நான்காம் இடத்தையும் பிடித்தன.மகளிருக்கான பிரிவில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி முதலிடமும், வேளாளர் கல்லுாரி இரண்டாம் இடமும், நிர்மலா கல்லுாரி மூன்றாம் இடமும், கோபி அரசு கலை அறிவியல் கல்லுாரி அணி நான்காம் இடமும் பிடித்தன. வெற்றி பெற்றவர்களுக்கு கல்லுாரி முதல்வர் அனிதா பரிசுகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி