உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை பற்றிய சர்வதேச கருத்தரங்கு

அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை பற்றிய சர்வதேச கருத்தரங்கு

கோவை : சிறந்த நரம்பியல் அறுவை சிகிச்சை மையம் என்ற அங்கீகாரத்தை, அமெரிக்க நாட்டின் எஸ்.ஆர்.சி., அமைப்பிடம் பெற்றுள்ள ராயல் கேர் மருத்துவமனை, இந்தியாவில் முதன் முறையாக, 'போக்கஸ்டு அல்ட்ரா சவுண்டு' சிகிச்சை தொடர்பான சர்வதேச கருத்தரங்கை நடத்தியது.இந்திய போக்கஸ்டு அல்ட்ரா சவுண்டு சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இக்கருத்தரங்கிற்கு, மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். கொரியா, ஸ்பெயின், பிரிட்டன் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் மருத்துவர்கள் பங்கேற்றனர்.மருத்துவ இயக்குனர் டாக்டர் பரந்தாமன் சேதுபதி, தலைமை செயல் அலுவலர் டாக்டர் மணி செந்தில்குமார், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரகுராஜ பிரகாஷ் மற்றும் டாக்டர்கள் செந்தில்குமார், ராஜ்குமார், கனகராஜூ, விஜயன், அருள் செல்வன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !