மேலும் செய்திகள்
கரூர் மாவட்டத்தில் உலக மகளிர் தின விழா
09-Mar-2025
சூலுார்; உலக மகளிர் தினத்தை ஒட்டி, விழிப்புணர்வு மாரத்தான் போட்டி சூலுாரில் நடந்தது.சூலுார் போலீஸ் ஸ்டேஷன் சார்பில், உலக மகளிர் தினத்தை ஒட்டி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. பெண் போலீசார், கல்லுாரி மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் போட்டியை, எஸ்.பி., கார்த்திகேயன் துவக்கி வைத்தார். 10 கி.மீ., துாரத்தை போட்டியாளர்கள் உற்சாகத்துடன் கடந்து வந்து சான்றிதழ்களை பெற்றனர்.கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., தங்கராமன், சூலூர் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாத்துரை, மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, எஸ்.ஐ., விக்னேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
09-Mar-2025