| ADDED : ஏப் 29, 2024 01:24 AM
- நமது நிருபர் -தமிழகவனத்துறை சார்பில், 'தமிழ்நாடு பயோ டைவர்சிட்டி கிரீனிங்'(பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டம்) திட்டத்தில், இலவசமாக மரக்கன்றுகளை நட்டு கொடுக்கும் திட்டம், நடப்பாண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக, கோதபாளையத்தில் உள்ள நாற்றுப்பண்ணையில், மரக்கன்று உற்பத்தி துவங்க இருக்கிறது.மாவட்டம் முழுவதும், நடப்பு நிதியாண்டில், 2.50 லட்சம் மரக்கன்றுகள் நட்டுக்கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விவசாய நிலம், தொழிற்சாலை வளாகம், பள்ளி, கல்லுாரி வளாகங்களில், குழிதோண்டி இலவசமாக நட்டுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. வனத்துறையில், மரம் வளர்க்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்தால், போதிய தண்ணீர் வசதி இருக்கிறதா என்பதை கள ஆய்வில் உறுதி செய்து, தேவையான மரக்கன்றுகள் நட்டு கொடுக்கப்படும்.குறைந்தபட்சம், 500 மரக்கன்றுகளும், அதிகபட்சமாக தேவையான மரக்கன்றுகளும் இலவசமாக நட்டுக்கொடுக்கப்படும். மரம் வளர்க்க விருப்பமுள்ள விவசாயிகள், பள்ளி, கல்லுாரி கள், தனியார் நிறுவனங்களிடம் இருந்து, முன்பதிவு துவங்கியுள்ளது.