உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நெல் விதைப்பண்ணை அமைக்க அழைப்பு; குறுகிய கால ரகம் தேர்வு செய்ய அறிவுரை

நெல் விதைப்பண்ணை அமைக்க அழைப்பு; குறுகிய கால ரகம் தேர்வு செய்ய அறிவுரை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, தரமான விதை நெல் உற்பத்தி சார்ந்த தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடந்தது.கோவை விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்று துறை சார்பில், தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கு, தரமான விதை நெல் உற்பத்தி சார்ந்த தொழில்நுட்ப பயிற்சி, ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்தது.விதைசான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து பேசியதாவது:குறுவை பட்டம் தொடங்க உள்ளதால் விவசாயிகள் அனைவருக்கும், 'பட்டம் தவறினால் நட்டம்' என்ற பழமொழிக்கு இணங்க நெல் விதை பண்ணை பரப்பளவை அதிகப்படுத்த வேண்டும்.குறுவை பட்டம் ஆரம்பமான நிலையில், நெல் பயிறுக்கு மிகவும் ஏற்ற பட்டத்துக்கு காலத்தே நாற்கால் அமைத்து பயிர் செய்ய விவசாயிகள் தீவிரம் காட்ட வேண்டும். சராசரியாக, ஆயிரம் ஏக்கருக்கு மேலாக பயிரிட வேண்டும்.குறுகிய கால நெல் ரகங்களான, ஏடிடி-48, ஏடிடி-37, ஏஎஸ்டி-16, ஏடிடி-45 தேர்வு செய்து விதைப்பண்ணை அமைத்து விதை உற்பத்தியை இருமடங்காக்கி, அதிக லாபம் பெற விவசாயிகள் திட்டமிட வேண்டும்.தனி நபர் சுத்தி நிலையம் அமைத்து, விதை உற்பத்தியாளராக விருப்பம் உள்ளவர்கள் கோவை, விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்று துறையை அணுகி பயன்பெறலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.மேலும், தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கான தேவையை கேட்டறிந்து, வல்லுநர் மற்றும் ஆதார விதைகள் கிடைக்க ஏற்பாடு செய்து தரப்படும் என உறுதியளித்தார்.விதைச்சான்று அலுவலர் நந்தினி, தரமான விதை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம், விதைப்பண்ணை அமைக்கும் முறைகள், பிற ரக கலவன் கண்டறிந்து அகற்றுதல் மற்றும் விதைப்பறிக்கை, வயலாய்வு தொடர்பாக விளக்கம் அளித்தார்.மேலும், விதைப்பறிக்கை மூன்று நகலில், பூப்பதற்கு, 15 நாள் முன்னதாக பதிவு செய்ய வேண்டும். விதைச்சான்று அலுவலர்களால், 85 மற்றும், 95 நாளில் வயலாய்வு மேற்கொண்டு கலவன்கள் அகற்ற, அதன் குணாதிசய தொடர்பாக தெளிவுப்படுத்துவர் என விளக்கமளித்தார். ஆனைமலை விதை உதவி அலுவலர் மாடசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி