| ADDED : ஜூலை 10, 2024 01:45 AM
வால்பாறை;வால்பாறை அரசினர் தொழில்பயிற்சி நிலையத்தில், இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் மாதம் துவங்கியது. பிட்டர், எலக்ட்ரீசியன், பேஷன் டிசைன், டெக்ஸ்டைல்ஸ், மெக்கட்ரானிக்ஸ் ஆகிய படிப்பிடிற்கான விண்ணப்பங்கள் 'ஆன்லைன்' வாயிலாகவும், நேரிலும் பெறப்படுகின்றன.வால்பாறை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் குணசேகரன் கூறுகையில், '' பயிற்சியில் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் கல்வி உதவித்தொகையாக, 750 ரூபாய், இலவச சைக்கிள், பஸ் பாஸ், சீருடை ஆகியவை வழங்கப்படும்.பயிற்சி முடிந்த பின் அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும். வால்பாறை மலைப்பகுதி மாணவர்கள் பயன்பெறும் வகையில் வரும், 15ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்,'' என்றார்.