உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாக்கு ெஷட்களில் போதை கூடாரம் நம் இளைஞர்கள் சீரழியும் பரிதாபம்

பாக்கு ெஷட்களில் போதை கூடாரம் நம் இளைஞர்கள் சீரழியும் பரிதாபம்

தொண்டாமுத்தூர்;தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், மீண்டும் வட மாநில போதை பவுடர் புழக்கம் அதிகரித்து வருகிறது.தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. பாக்கு தொழிலுக்காக, கடந்த சில ஆண்டுகளாக, அசாம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள், தொண்டாமுத்தூர், காளம்பாளையம், நரசீபுரம், தென்னமநல்லூர், உலியம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பாக்கு ஷெட்களிலும், வாடகை வீடுகளிலும் தங்கியுள்ளனர்.வடமாநில தொழிலாளர்களில் சிலர், கடந்த சில ஆண்டுகளாக, அசாம் மாநிலத்தில் இருந்து சட்டவிரோதமாக போதை பவுடரை, இங்கு கொண்டு வந்து வடமாநில இளைஞர்களுக்கு விற்று வந்தனர்.தற்போது, இங்குள்ள இளைஞர்களும், இந்த போதை பவுடரை பயன்படுத்தி அடிமையாகி வருகின்றனர். போதை பவுடரை, தண்ணீரில் கலந்து ஊசி மூலம் கை நரம்புகளில் செலுத்தி போதை ஏற்றுகின்றனர். மில்லி கிராம் அளவிலான போதை பவுடர் சிறிய டப்பா, 1,500 முதல் 2,000 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்தாண்டு, 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பவுடரையும், கடந்த மே மாதம், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பவுடரையும் போலீசார் பறிமுதல் செய்து, விற்பனையில் ஈடுபட்டவர்களை, கைது செய்து சிறையில் அடைத்தனர்.தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் தங்கியிருந்த பெரும்பாலான வடமாநில தொழிலாளர்கள், லோக்சபா தேர்தலுக்காக, அசாம் மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு சென்று விட்டு, தற்போது, மீண்டும் கோவைக்கு திரும்பி வருகின்றனர். சிலர் அங்கிருந்து போதை பவுடரையும் கொண்டு வந்து இங்கு விற்பனை செய்து வருகின்றனர்.இதனால், தற்போது, தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளில், மீண்டும் போதை பவுடர் பயன்பாடு அதிகரித்து, ஏராளமான இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.போலீசார் உடனடியாக, போதை பவுடர் விற்பனையை தடுத்து, இளைஞர்கள் சீரழிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை