உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சங்கரா கல்லுாரியில் ஐடிபாட் சங்கம்

சங்கரா கல்லுாரியில் ஐடிபாட் சங்கம்

கோவை;சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியின், தகவல் தொழில் நுட்பத் துறையில் 'ஐடிபாட்' சங்க துவக்க விழா நடைபெற்றது. முதல்வர் ராதிகா மற்றும் துணை முதல்வர் பெர்னார்டு எட்வர்ட் வாழ்த்துரை வழங்கினர்.ராபர்ட் போஷ் குளோபல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின், உதவி மென்பொருள் பொறியாளர் பிரேம் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், “கல்லுாரி காலங்களில் மாணவர்கள் தங்களது வேலைவாய்பைப் பெறுவதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்,” என்றார்.தகவல் தொழில் நுட்பத் துறை சார்பில், தொழில் நிறுவன மன்ற கூட்டமும் நடைபெற்றது. தகவல் தொழில் நுட்பத் துறையின் தலைவர் முத்துச்சுடர் மற்றும் ஆசிரியர்கள், தகவல் தொழில் நுட்பத் துறையின் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்