உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இது நல்ல தண்ணி வரும் நேரம்! வாட்ஸ் ஆப் குரூப் அறிவிப்பால் தீர்கிறது பாரம்

இது நல்ல தண்ணி வரும் நேரம்! வாட்ஸ் ஆப் குரூப் அறிவிப்பால் தீர்கிறது பாரம்

கோவை:குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் சூழலில், 'நல்ல தண்ணி' போன்ற பெயர்களில் வார்டுகளில் 'வாட்ஸ் அப்' குழு உருவாக்கி, பொது மக்கள் கைகோர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.கோவை மக்களுக்கு சிறுவாணி, பில்லுார், ஆழியாறு உள்ளிட்டவை முக்கிய குடிநீர் ஆதாரங்களாக திகழ்கின்றன. பருவ மழை பொய்த்து போனதால், இவ்வாண்டு துவக்கம் முதலே அணைகளில் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.போதா குறைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு, கோவையில் வெயிலின் தாக்கம், 100 டிகிரியை தாண்டி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வரும் ஜூன் வரை சமாளிக்கும் வகையில் திட்டமிடப்பட்டு, அணைகளில் இருந்து குடிநீர் எடுத்து, வினியோகிக்கப்பட்டு வருகிறது.முன்பு, 10 முதல், 15 நாட்களாக இருந்த குடிநீர் வினியோக இடைவெளி தற்போது, 15 நாட்களையும் தாண்டிவிட்டது. குடிநீர் அல்லாத தேவைகளுக்கு, 'போர்வெல்'கள் வாயிலாக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப் குழுக்கள்

தண்ணீரின் முக்கியத்துவம் அறிந்து, சில வார்டுகளில் 'வாட்ஸ் அப்' குழுக்கள் உருவாக்கப்பட்டு குடிநீர் வினியோக நேரம், பயன்பாடு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. சிங்காநல்லுார், 61வது வார்டு கள்ளிமடை, நஞ்சப்பா நகரில் 'நல்ல தண்ணி' என்ற 'வாட்ஸ் அப்' குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், குடிநீர் வினியோகிப்பாளர், பொது மக்கள் இடம்பெற்றுள்ளனர்.இக்குழுவில் குடிநீர் வினியோக நேரம் மட்டுமின்றி குடிநீர் தட்டுப்பாடு, அணைகளின் நிலவரம் குறித்த தகவல்கள், பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் பகிரப்படுகின்றன. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், குழாய்களை சரியாக 'குளோஸ்' செய்தல் உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தப்படுகிறது. மாநகராட்சியின், 100 வார்டுகள் உட்பட மாவட்டம் முழுவதும் தண்ணீர் சிக்கனம் அவசியமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்