ேஷக்கல்முடி ரோடு சேதம் வாகன ஓட்டுநர்கள் அவதி
வால்பாறை;ேஷக்கல்முடி ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறை அடுத்துள்ளது சோலையாறுடேம். இங்கிருந்து, 7 கி.மீ., தொலைவில் ேஷக்கல்முடி எஸ்டேட் உள்ளது. இதை சுற்றிலும் கல்யாணப்பந்தல், முருகாளி, புதுக்காடு எஸ்டேட்கள் உள்ளன.இந்நிலையில், சோலையாறு டேமிலிருந்து, ேஷக்கல்முடி செல்லும் ரோடு பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நிலையில், மழை நீர் தேங்கி, குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் வாகன ஓட்டுநர்கள் பயணிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.மக்கள் கூறுகையில், 'வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில், ரோடு சீரமைக்காததால் அவதிக்குள்ளாகிறோம். 7 கி.மீ., துாரம் உள்ள ரோட்டை சீரமைக்க, ஏழு ஆண்டுகளாக போராடுகிறோம். தொழிலாளர்கள் நலன் கருதி இந்த ரோட்டை நகராட்சி சார்பில் சீரமைக்க வேண்டும்,' என்றனர்.