உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளை வேலை வாய்ப்பு முகாம்

நாளை வேலை வாய்ப்பு முகாம்

கோவை, : நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கோவை அரசு கலைக்கல்லுாரியில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க, மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கோவை அரசு கலைக்கல்லுாரியில், இவ்வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை, 9:00 மணி முதல் நடக்க உள்ளது. இதில், 40க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.முகாமில், வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், 60 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. எழுத்து தேர்வு, குழு விவாதம், நேர்காணல் என, நிறுவனங்களின் தன்மைக்கு ஏற்ப தேர்வு நடத்தப்படும். தேர்வு செய்யப்படுவோருக்கு, பணி நியமன ஆணை முகாமில் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை