உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேர் வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்; காரமடை நகராட்சி அதிரடி

தேர் வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்; காரமடை நகராட்சி அதிரடி

மேட்டுப்பாளையம்; காரமடையில், தேர் செல்லும் வீதிகளில் உள்ள, ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில், நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டது.காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா மார்ச் 12ல் நடக்க உள்ளது. கோவை வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தன், காரமடை அரங்கநாதர் கோவிலில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது, 'தேர் செல்லும் வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்ற வேண்டும். சாலைகளில் உள்ள குழிகளுக்கு தார் போட வேண்டும்.பக்தர்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகளை, காண்காணிப்பு கேமிராக்களை அமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சியின் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் ஆகிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து காரமடை நகராட்சி கமிஷனர் மதுமதி உத்தரவின்படி, நேற்று மதியம் காரமடையில் தேர் செல்லும் வீதிகளில் ஆக்கிரப்புகளை அகற்றும் பணி நடந்தது. கோவில் முன்பாக இருந்த கடைகள், நான்கு ரத வீதிகளில் உள்ள தற்காலிக கடைகளை, நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ