உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா: கோலாகலமாக நடந்தது கொடியேற்றம்

கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா: கோலாகலமாக நடந்தது கொடியேற்றம்

கோவை; கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் சூழ, மேளதாளங்கள் முழங்க நேற்று கோலாகலமாக நடந்தது.கோவையின் காவல்தெய்வமாக விளங்கிவரும் கோனியம்மன் கோவில், தேர்த்திருவிழாவையொட்டி, கடந்த, 10ம் தேதி, தேர் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியும், 18ம் தேதி, பூச்சாட்டு விழாவும் நடந்தது. தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. வரும் 26ல் புலி வாகனத்திலும், 27ல் கிளி வாகனத்திலும், 28ல் சிம்ம வாகனத்திலும், மார்ச் 1 அன்று அன்னவாகனத்திலும், மார்ச் 2ல் காமதேனு வாகனத்திலும், மார்ச் 3ல் வெள்ளையானை வாகனத்திலும் அம்மன் திருவீதி உலா வந்து, அருள்பாலிக்கிறார். மார்ச் 4ல் அம்மனுக்கு திருக்கல்யாணமும், மார்ச் 5ல் திருத்தேரோட்டமும் நடக்கிறது. நிகழ்ச்சியில் பங்கேற்று, கோனியம்மனின் அருளை பெற கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி