உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.1 லட்சம் பணத்துடன் சூட்கேஸ்ஆட்டோ டிரைவருக்கு பாராட்டு

ரூ.1 லட்சம் பணத்துடன் சூட்கேஸ்ஆட்டோ டிரைவருக்கு பாராட்டு

கோவை;ஆட்டோவில், பயணி விட்டுச் சென்ற ரூ.1 லட்சம் பணத்துடன் கூடிய சூட்கேஸை ஒப்படைத்த ஆட்டோ டிரைவரின் நேர்மைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.கோவை வேடபட்டியை சேர்ந்தவர் சசிகுமார், 39. ஆட்டோ டிரைவர். கடந்த, 15 ஆண்டுகளாக ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார். இவருக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகள், தனியார் கல்லுாரியில் பி.காம்., மற்றும் மகன், இன்ஜி., படித்து வருகின்றனர். கோவை ரயில்வே ஸ்டேஷன் வரும் பயணிகளை அவர் ஏற்றி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை, கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு ஆந்திராவில் இருந்து வந்த பயணி ஒருவர், ஆட்டோவில், எட்டிமடை சென்றார். அங்குள்ள தனியார் கல்லுாரியில் பயிலும், தனது மகனை சந்திக்க சென்றார். ஆட்டோவை விட்டு இறங்கிய பின் உடமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினார். இதையடுத்து சசிகுமார் ஆட்டோவை எடுத்துக் கொண்டு கிளம்பினார். பாதி துாரம் வந்த பின் ஆட்டோவின் பின்பகுதியை பார்த்த போது அங்கு சூட்கேஸ் ஒன்று இருப்பதை கண்டார். அது ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வந்த பயணியின் உடமை எனத் தெரிந்தது. இதையடுத்து மீண்டும் பயணி இறங்கிய இடத்துக்கு சென்று, அவரிடம் சூட்கேஸை ஒப்படைத்தார்.சசிகுமார் கூறுகையில்,''ஆட்டோவில் பாதி துாரம் வந்த பின்னரே பயணி உடமையை விட்டுச் சென்றது தெரிந்தது. இதையடுத்து அதை மீண்டும் ஒப்படைக்க அங்கு சென்றேன். அங்கு தந்தையும், மகனும் மிகவும் பதட்டத்துடன் அழுது கொண்டிருந்தனர். நான் சூட்கேஸை கொடுத்ததும் அவர்கள் நிம்மதி அடைந்தனர். ஆந்திராவில் இருந்து வந்த அவர், கல்லுாரியில் படிக்கும் மகனின் கல்லுாரி கட்டணத்தை செலுத்த கோவை வந்ததாக கூறினார். மேலும், அந்த சூட்கேஸில் ரூ.1 லட்சம் பணம் வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். பணத்தை ஒப்படைத்தற்கு இருவரும் நன்றி தெரிவித்தனர். அவர் பெயரை கேட்கவில்லை. பணத்தை ஒப்படைத்ததும், அங்கிருந்து புறப்பட்டு விட்டேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை