உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கக்குமலை ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம்

கக்குமலை ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம்

கருமத்தம்பட்டி; செம்மாண்டாம்பாளையத்தில் உள்ள பாறை ஊற்று கக்குமலை ஆண்டவர் கோவில் அமைக்கும் பணிகள் முடிந்து, 8ம் தேதி காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.நேற்று முன்தினம் காலை, 6:30 மணிக்கு இரண்டாம் கால ஹோமம் முடிந்து, புனித நீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. காலை, 7:45 மணிக்கு, விமானம் மற்றும் விநாயகர், பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !